ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மக்கள் தொகையை குறைக்கும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கி இருக்கும் அந்நாட்டு அரசு, தலைநகரில் இருந்து காலி செய்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஒரு குழந்தைக்கு ஜப்பான் மதிப்பின்படி ஒரு மில்லியன் என்னை வழங்குவதாக அறிவித்து இருக்கிறது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மக்கள் தொகை பெருக்கம் வெகுவாக அதிகரித்து இருக்கிறது. மக்கள் தொகை அடர்த்தியின் காரணமாக இந்த டோக்கியோவில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை என அந்நாட்டு அரசு கருதுகிறது.
எனவே டோக்கியோவில் மக்கள் தொகையை குறைக்க முடிவு செய்த அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் முக்கியமாக டோக்கியோவில் வசிக்கும் குடும்பங்களுக்கு பணம் கொடுத்து நகரத்தை விட்டு வெளியே அனுப்ப திட்டம் தீட்டி உள்ளது.
அந்த வகையில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து வெளியேறி புறநகர் அல்லது கிராம பகுதிகளில் குடியேறும் மக்களுக்கு ஊக்கத் தொகை கொடுப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்து உள்ளது. அதன்படி டோக்கியோவில் இருந்து வெளியேறும் ஒரு குழந்தைக்கு ஜப்பான் மதிப்பில் ஒரு மில்லியன் என் வழங்கப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்து உள்ளது.
3 மில்லியன் என் ஒரு மில்லியன் என் என்பது இலங்கை மதிப்பில் ரூ.31 லட்சமாகும். இந்த திட்டத்தின்படி 2 குழந்தைகளை கொண்ட ஒரு குடும்பத்துக்கு 3 மில்லியன் என் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதாவது இலங்கை மதிப்பின்படி, ரூ.93 லட்சம் வழங்கப்படும் என்று ஜப்பான் அரசு தெரிவித்து இருக்கிறது.
இந்த திட்டத்தின் காரணமாக 2027 ஆம் ஆண்டிற்குள் டோக்கியோவில் இருந்து 10,000 பேர் வெளியேறி பிற பகுதிகளுக்கு செல்வார்கள் என்பது ஜப்பான் அரசின் எதிர்பார்ப்பாக உள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் இதுவரை 1,184 குடும்பங்களுக்கு அந்நாட்டு அரசு நிதியுதவி செய்து உள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டில் 290 பேரும், கடந்த 2019 ஆம் ஆண்டில் 71 பேரும் டோக்கியோவில் இருந்து வெளியேறி இருக்கிறார்கள். மத்திய டோக்கியோ மாநகரத்தில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக தங்கி இருப்பவர்கள் இந்த திட்டத்தின் கீழ் ஜப்பான் அரசிடம் நிதி பெற்று நகரத்தை விட்டு வெளியேற முடியும். அதேபோல், தலைநகருக்கு செல்லாமல் தாங்கள் வசிக்கும் பகுதியிலேயே வியாபாரம் செய்ய தொடங்கினால் அரசின் உதவி இருக்கும் என்று உறுதியளிக்கப்பட்டு இருக்கிறது.
அதே நேரம் டோக்கியோவில் இருந்து வெளியேறும் மக்கள் ஒரு மில்லியன் என்னை பெறுவது அவ்வளவு எளிதான விசயம் அல்ல என்றே கூறப்படுகிறது. ஆம், டோக்கியோவிலிருந்து வெளியேறிய புதிய வீட்டுக்கு சென்றவுடன் அங்கு 5 ஆண்டுகள் வசிக்க வேண்டும் எனவும், அந்த வீட்டில் உள்ள ஒருவர் வேலையோ அல்லது புதிய தொழில் தொடங்கும் முயற்சியிலோ இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
5 ஆண்டுகளுக்கு முன்பே புதிய வீட்டிலிருந்து வெளியேறினால் அரசிடம் தாங்கள் பெற்ற தொகையை திருப்பி செலுத்த வேண்டுமாம். ஜப்பான் மக்கள் கிராமங்கள், சிறுநகரங்களிலேயே தங்கி இருக்கும் வகையில் அங்குள்ள சிறப்பங்களை தொடர்ந்து தெரியப்படுத்துவதுடன், கிராமங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.