நாளாந்த நாணய கட்டுப்பாட்டு வழக்கத்தை இல்லாமல் செய்யவும், வர்த்தக வங்கிகள் மத்திய வங்கியிடம் கொடுத்து வைக்க வேண்டிய 15% வெளிநாட்டு நாணய ஒதுக்க முறைமையை இல்லாமல் செய்யவும் மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் முதலாம் கட்ட நிதியுதவி இம்மாத இறுதியில் கிடைக்கவுள்ளது.
ஏப்ரல் ஆகும் போது வெளிநாடுகளில் பணியாற்றுவோரால் இலங்கைக்கு அனுப்பப்படும் பணம் கணிசமாக அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன.
சுற்றுலாப்பயணிகளின் பெருக்கம் தொடர்கிறது.
அடுத்த மாதம் முதல் இலங்கை தேயிலை விலையும் நிரம்பலும் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதுபோன்ற காரணங்களால் இன்னும் 1/2 மாதங்களில் டொலரின் பெறுமதி 280 ரூபாவை விட குறையும் சாத்தியங்கள் அதிகம் உள்ளன.