இந்திய தலைநகர் டெல்லியில் சற்றுமுன் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேபாளத்தில் இன்று மாலை 4.16 மணியளவில் ரிச்டர் அளவுகோலில் 5.6 அளவிலான நிலநடுக்கம் ஏற்படுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் அறிவித்துள்ளது. நேபாளத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் இந்திய தலைநகர் டெல்லியில் உணரப்பட்டுள்ளது.
டெல்லியில் நிலநடுக்கம் உணரபட்டதும் மக்கள் அச்சத்தில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இருந்து வெளியே ஓடி வந்ததாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
அத்துடன் வாராணசி, பாட்னா, குருகிராம், ஜெய்ப்பூர் ஆகிய பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேபாளத்தில் கடந்த நவம்பர் 3 ஆம் திகதி ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தமை குறிப்பிடதக்கது.