டெல்லியில் அரசு அதிகாரிகளை நியமிக்க ஆளுநரை விட மாநில அரசுக்கே அதிகாரம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. : துணை நிலை ஆளுநருக்கே அதிகாரம் என்ற ஒன்றிய அரசின் வாதத்தை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. டெல்லியில் அரசு அதிகாரிகளை நியமிக்க மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்பதை ஏற்க முடியாது.
ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே நிர்வாக அதிகாரம் உள்ளது. மக்களால் தேர்வான அரசுக்கு அதிகாரிகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் வழங்கப்படாவிட்டால் அரசியலமைப்பின் அடிப்படையே கேள்விக்குறியாகிவிடும் எனவும் தெரிவித்துள்ளது.