நாடளாவிய ரீதியில் டெங்கு அதிக ஆபத்துள்ள வலயங்களின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, மேல் மாகாணத்திலேயே அதிகளவு டெங்கு நோயாளர்கள் தொடர்ந்தும் பதிவாகி வருவதாக அதன் பணிப்பாளர் வைத்தியர் நளின் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் திங்கட்கிழமை (13.11.2023) முதல் விசேட டெங்கு தடுப்பு வாரம் அமுல்படுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.