நாட்டில் செப்டெம்பர் மாதத்தில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 2000ஐ தாண்டியுள்ளது.அண்மைக்காலமாக பெய்து வரும் மழையினால் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.
தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் தகவல்களின்படி, இம்மாதம் 2,003 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.முன்னைய மாதங்களை விட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறையும் என சுகாதார திணைக்களம் முன்னரே கணித்திருந்தது. ஆனால் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது.
இதன்படி, இலங்கையில் பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 63,881 ஆக அதிகரித்துள்ளது.அதேவேளை நாட்டில் டெங்கு அபாய வலயங்கள் 07 ஆக குறைக்கப்பட்டுள்ள போதிலும், தற்போதைய மழையினால் அது மேலும் அதிகரிக்கலாம் என சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.