டெங்கு நோயினால் பெண் சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் குருநகர் இராணுவ முகாமில் கடமையாற்றி வந்த கொழும்பைச் சேர்ந்த எம்.கே.செவ்வந்தி எனும் பெண் சிப்பாயே உயிரிழந்துள்ளார்.
கடந்த 05ஆம் திகதி காய்ச்சல் காரணமாக பலாலி இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், மருத்துவ பரிசோதனையில் டெங்கு காய்ச்சல் உறுதியானது.
அதனையடுத்து 07 ஆம் திகதி மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.