பத்து பாதாள உலகக் கும்பல் தலைவர்கள் டுபாயில் இருப்பதாக தெரியவந்துள்ளது.
அவர்களை அந்நாட்டில் இருந்து நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளை துபாய் அட்டர்னி ஜெனரலுக்கு அனுப்ப அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. டுபாய் அரசினால் இலங்கைக்கு அனுப்பப்பட்ட பாதாள உலக தலைவன் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தமையினால் இந்த பாதாள உலக தலைவர்களை இலங்கைக்கு நாடு கடத்துவது தடைபட்டது.
இது தொடர்பில் சர்வதேச மன்னிப்புச் சபை டுபாய் அரசாங்கத்திடம் முறைப்பாடு செய்து அந்த பாதாள உலக செயற்பாட்டாளர்களை இலங்கைக்கு அனுப்புவதை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்திருந்தது.