டுபாயிலிருந்து வந்த வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய
த்தின் புறப்படும் முனையத்தில் வைத்து கடத்தப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், கடத்தப்பட்ட நபரை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்கு அழைத்துச் சென்று வர்த்தகரிடம் இருந்து தங்கம் அடங்கிய 8 ஜெல் பொதிகளை வலுக்கட்டாயமாக எடுத்துச் சென்ற 2 பொலிஸ் சார்ஜன்ட்களை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொலிஸ் சுற்றுலா பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட்கள் இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் தங்கத் தூள் கலந்த இரண்டு ஜெல் பொதிகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கொஸ்வத் கொட்டாரமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய வர்த்தகர் ஒருவர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய இந்த இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்களும் சந்தேகநபர்களாக கைது செய்யப்பட்டதாக அப்பகுதியின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.