Homeஉலகம்டிக்டொக் செயலி பற்றிய புதிய கட்டுப்பாடுகள்.

டிக்டொக் செயலி பற்றிய புதிய கட்டுப்பாடுகள்.

Published on

டிக்டொக் செயலியை பயன்படுத்தும் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.அதன்படி, 18 வயதுக்குட்பட்டவர்கள் ஒரு நாளைக்கு ஒரு மணித்தியாலம் மாத்திரமே டிக்டொக் செயலியை பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அடுத்த வாரமளவில் டிக்டொக் செயலி பற்றிய புதிய கட்டுப்பாடுகள் வெளியிடப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.இளைய தலைமுறை பயனாளிகளின் டிஜிற்றல் எனப்படும் எண்ணியல் வாழ்வை மேம்படுத்தும் வகையில் இந்த புதிய திட்டம் வரவுள்ளதாக டிக்டொக் அறிவித்துள்ளது.

எதிர்வரும் வாரங்களில் நடைமுறைக்கு வரவுள்ள இந்தத் திட்டத்தினால் 18 வயதுக்கு உட்பட்ட பயனாளிகளின் டிக்டொக் திரைநேர கணக்குகள் தினசரி ஒரு மணிநேரம் என வரம்புக்குள் வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பல நாடுகளில் டிக்டொக் போன்ற செயலிகளால் இளையோர் ஈர்க்கப்படுவது பெரும் சிக்கலாக மாறியுள்ள நிலையில் வரவுள்ள இந்த மாற்றத்தின் படி டிக்டொக் திரைநேரத்தில் 60 நிமிட வரம்பை அடைந்தவுடன் பயனாளிகள் தமக்குரிய கடவுக்குறியீட்டை உள்ளிடும்படி கோரப்படும் போது குறித்த பயனாளி 18 வயதிற்குட்பட்டவராக இருந்தால் அவருக்குரிய பயன்பாடு கட்டுப்படுத்தப்படும் எனத்தெரிகிறது.

சமூக ஊடக தளங்கள் இளம் பயனர்கள் மீது செலுத்தும் தாக்கம் குறித்து பல ஆண்டுகளாக எடுக்கப்பட்ட ஆய்வுகளை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.இன்ஸ்ரகிராம் மற்றும் ஸ்னாப்சாட் உள்ளிட்ட ஏனைய தளங்களும் இதேபோன்ற புதிய கட்டுப்பாடுகளை இளைய பயனாளிகளை முன்வைத்து எடுத்துவருவது குறிப்பிடத்தக்கது.

Latest articles

இளம் பெண்களை தகாத தொழிலில் ஈடுபடுத்தும் கோடீஸ்வர பெண் கைது!

கொழும்பில் மசாஜ் நிலையங்களுக்கு தெரபிஸ்டுகளை ஆட்சேர்ப்பதற்காக பத்திரிகைகளில் விளம்பரம் செய்து இளம் பெண்களை தகாத தொழில் ஈடுபடுத்தும் கோடீஸ்வர...

எல்லாவல நீர்வீழ்ச்சியில் காணாமல்போன இளைஞர்கள் சடலங்களாக மீட்பு.

மொனராகலை - வெல்லவாய, எல்லாவல நீர்வீழ்ச்சியில் காணாமல்போன 4 இளைஞர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் (21.03.2023)...

குவைத்தில் சிக்கியிருந்த 48 இலங்கை வீட்டுப் பணியாளர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.

தொழில் நிமித்தம் குவைத் சென்று நீண்ட நாட்களாக இலங்கைக்கு திரும்ப முடியாமல் கடும் பிரச்சினைகளை எதிர்கொண்ட 48 இலங்கை...

2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான பாடசாலை வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.

2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பாடசாலை வெட்டுப்புள்ளிகள் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, மாணவர்கள் தாம்...

More like this