ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் அரசாங்கம் கட்டுப்படுத்தப்படவில்லை என்றும், அவர் ராஜபக்சவின் பலிகடாக்களின் கைப்பாவையாக மாறி ராஜபக்சவின் தேவைக்கேற்ப அரசை நடத்துவதாகவும் சமகி ஜன பலவேகயவின் பௌத்த மத விவகாரங்களின் தலைவர் கலாநிதி தனவர்தன குருகே சுட்டிக்காட்டினார்.
டொலர்களை கண்டுபிடிப்பதற்கு அரசாங்கத்திடம் முறையான வேலைத்திட்டம் இல்லை எனவும், எதிர்வரும் 6 மாதங்களில் டொலரின் பெறுமதி 1000 ரூபாவிற்கு மேல் அதிகரிக்கும் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.