ஜேர்மனியின் பெர்லின் நகரில் தமிழ் குடும்பத்தை சேர்ந்த 42 வயது பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்குள்ள புலம்பெயர் தமிழ் தொடர்புகளின்படி, குறித்த குடும்பப் பெண்ணின் கணவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கணவருடன் பணிபுரியும் இளைஞனுடன் குறித்த பெண்ணுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகித்து கணவர் அவரை கடுமையாக தாக்கியதையடுத்து அந்த பெண் அறைக்குள் பூட்டிவிட்டு கை, வயிற்றை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாக தெரியவருகிறது. பின்னர் உடனடியாக போலீசார் அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சம்பவத்தையடுத்து வைத்தியசாலையில் பெண்ணை பரிசோதித்த வைத்தியர்கள், தலை மற்றும் முதுகில் பலத்த காயங்கள் இருப்பதாக பொலிஸாரிடம் தெரிவித்தனர். பொலிஸாரின் விசாரணைகளின் போது, கணவனால் தான் தாக்கப்பட்டதாக பெண் கூறியதை அடுத்து கணவர் கைது செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது. கணவன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என பெண்ணின் நண்பர்கள் வட்டாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.