ஜேர்மனியில் 53 வயது நபர் ஒருவர் எச்.ஐ.வி நோயிலிருந்து குணமடைந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.
அவரது தனியுரிமையைப் பாதுகாப்பதற்காக, ஜெர்மனியின் நகரான டஸூல்டோர்ப் என்ற பெயரை முன்னிலைப்படுத்தி டஸூல்டோர்ப் நோயாளி என்று அவரை குறிப்பிட்டுள்ள ஆராய்ச்சியாளர்கள், எச்.ஐ.வியில் குணப்படுத்தப்பட்ட ஐந்தாவது நபர் இவர் என்று தெரிவித்துள்ளனர்.
அவரது வெற்றிகரமான சிகிச்சையின் விபரங்கள் முதன்முதலில் 2019 இல் ஒரு மாநாட்டில் அறிவிக்கப்பட்டாலும், அந்த நேரத்தில் அவர் அதிகாரப்பூர்வமாக குணப்படுத்தப்பட்டதை ஆராய்ச்சியாளர்களால் உறுதிப்படுத்த முடியவில்லை.
நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் எச்.ஐ.வி மருந்தை நிறுத்திய பிறகும், டஸ்ஸல்டார்ஃப் நோயாளியின் உடலில் கண்டறியக்கூடிய வைரஸ் எதுவும் கண்டறியப்படவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.
இந்த சிகிச்சையின்படி, ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு எச்ஐவி நோயாளிகள் குணமடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை என்பது ஒரு நபரின் நோயெதிர்ப்பு மண்டலத்தை திறம்பட மாற்றியமைக்கும் அதிக ஆபத்துள்ள செயல்முறையாகும்.
ஒருவரின் புற்றுநோயைக் குணப்படுத்துவதே இந்த சிகிச்சையின் முதன்மையான குறிக்கோளாகும்.
ஆனால் இந்த செயல்முறை ஒரு சில நிகழ்வுகளில் எச்.ஐ.வி குணப்படுத்துவதற்கும் வழிவகுத்தது உலகளவில் சுமார் 38.4 மில்லியன் மக்கள் எச்.ஐ.வி உடன் வாழ்கின்றனர்.
எச்.ஐ.வி குணப்படுத்தப்பட்ட முதலாமவர் திமோதி ரே பிரவுன் என்பவராவார் 2009 இல் பெர்லின் நோயாளி என்று ஆராய்ச்சியாளர்கள் அவரை அழைத்துள்ளனர்.