இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் திரைப்படம் ஜெயிலர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடிகர் ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி வருகிறார். இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் சுனில், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து ஜெயிலர் திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் பரவி வந்தது. இந்நிலையில், ஜெயிலர் திரைப்படத்தில் நடிகர் ஜாக்கி ஷெராஃப் இணைந்துள்ளார். இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இப்படத்தில் இந்திய திரையுலகின் முன்னணி நடிகர்கள் இணைந்து வருவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இதற்குமுன்பு ஆரண்யகாண்டம், விஜய்யின் பிகில் உள்ளிட்ட சில தமிழ் படங்களில் ஜாக்கி ஷெராஃப் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயிலர் படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம், உற்சாகத்தில் ரசிகர்கள்.
Published on
