Homeஇந்தியாஜி20 உச்சி மாநாட்டில் இந்தியா வெளியிட்ட பிரகடனம்

ஜி20 உச்சி மாநாட்டில் இந்தியா வெளியிட்ட பிரகடனம்

Published on

இந்திய தலைநகர் டெல்லியில் G20 நாடுகளின் உச்சிமாநாடு தொடர்ங்கியுள்ளது.டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்று வரும் G20 உச்சிமாநாட்டிற்கு இந்தியா தலைமை தாங்கி வருகின்றது.

இந்த மாநாட்டில் G20 உறுப்பு நாடுகள் இணைந்து பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றின.இந்நிலையில், இந்த G20 உச்சி மாநாட்டின் ஒருபகுதியாக பிரித்தானியா பிரதமர் ரிஷி சுனக்குடன் பிரதமர் நரேந்திர மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த சந்திப்பின்போது வணிக உறவை வலுப்படுத்துவது, முதலீடுகளை அதிகரிப்பது குறித்தும் இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர்.இந்தியாவுடன் பிரித்தானியாவும் இணைந்து நீடித்த வளமான உலகத்தை உருவாக்க இணைந்து செயல்படவும் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக பிரித்தானிய பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,

“இருநாட்டு பிரதமர்களும் பிரித்தானியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நெருங்கிய மற்றும் வளர்ந்து வரும் உறவுகளைப் பற்றி விவாதித்தனர்.

மேலும்  பிரித்தானியா – இந்தியா சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை வழங்குவதற்கான வேலைகள் குறித்து ஆக்கப்பூர்வமான உரையாடலை நடத்தினர்” என்று தெரிவித்துள்ளது.

Latest articles

வடமாகாணத்தில் 25,000 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள்

வடமாகாணத்தில் நிரந்தர வீடுகள் இல்லாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 25,000 நிரந்தர வீடுகளை கட்டிக்கொடுத்து வடமாகாணத்தில் உள்ள...

ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டு அறிமுகம்

ஜேர்மனியில் 49 யூரோக்கள் பயணச்சீட்டின் அறிமுகம் பொதுப்போக்குவரத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து,...

அதிகரிக்கப்படவுள்ள ரயில் கட்டணங்கள்

ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை ரயில்வே திணைக்களத்தை அதிகாரசபையாக மாற்றியதன் பின்னர் அனைத்து ரயில்...

உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதை:முதலமைச்சர் அறிவிப்பு

இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்....

More like this