ஜப்பானில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஆட்டோமொபைல் பொறியியல் துறையில் பயிற்சி பெற்று வந்த 23 வயதுடைய இலங்கை இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக ஜப்பான் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஜப்பானின் கிரான் சோ பகுதியில் நேற்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் விசாரணைகளின் பின்னர் மேலதிக தகவல்கள் வழங்கப்படும் எனவும் ஜப்பான் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.