Homeஇலங்கைஜப்பானில் உள்ள இலங்கையர்களுக்கான வேலை வாய்ப்புகள் குறித்து தொழில் அமைச்சர் ஆய்வு

ஜப்பானில் உள்ள இலங்கையர்களுக்கான வேலை வாய்ப்புகள் குறித்து தொழில் அமைச்சர் ஆய்வு

Published on

ஜப்பானிய தொழிலாளர் சந்தையில் இலங்கைப் பணியாளர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக ஜப்பானில் உள்ள பிரதான வேலைவாய்ப்பு நிறுவனங்களுடன் தமது அமைச்சு நெருக்கமாகச் செயற்பட்டு வருவதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர், PERSOL Global Workforce இன் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு மொரிஹிரோ தடாவை சந்தித்து இலங்கை தொழிலாளர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை வழங்குவது தொடர்பில் கலந்துரையாடினார்.

திரு. மோரிஹிரோ தடா ஜப்பானில் வேலை செய்வதற்கு மொழிப் பயிற்சி பெறுவதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டினார்.

ஜப்பானிய மொழியை கற்பிக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்த அமைச்சர், ஜப்பானிய மொழியை பாடசாலை பாடத்திட்டத்தில் ஒரு பாடமாக இணைப்பதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

வருங்கால ஊழியர் ஒருவருக்கு வேலை கிடைக்கும் போது, ஜப்பானிய மொழிப் புலமையைப் பெறுவதற்கு செலவிடப்பட்ட தொகையை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் திருப்பிச் செலுத்தும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஜப்பான் இலங்கைக்கு மூலோபாய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்தது என சுட்டிக்காட்டிய அமைச்சர், ஜப்பானில் உள்ள இலங்கையர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை திறந்து வைப்பதற்காக PERSOL Global Workforce உடன் ஒரு பங்காளித்துவ உடன்படிக்கையில் ஈடுபடவும் ஒப்புக்கொண்டார்.

Latest articles

இலங்கையர்களுக்கு வெளியான எச்சரிக்கை; அழகு நிலையத்தில் இடம்பெற்ற மோசடி

கொழும்பு, ராஜகிரிய பகுதியில் புற்று நோயாளர்களுக்கு பயன்படுத்தப்படும் ஊசிகளை சட்டவிரோதமாகப் பயன்படுத்தும் மற்றுமொரு அழகு நிலையம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. சினிமா நடிகைகள்...

ஆலய தேர்த் திருவிழாவில் பூசாரி உயிரிழப்பு

களுத்துறையில் ஆலய தேர்த் திருவிழாவின் போது தீ விபத்தில் சிக்கி பூசாரி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம்...

தன்னை தானே சுட்டு விபரீத முடிவெடுத்த விமானப்படை வீரர்!

பம்பலப்பிட்டி பொன்சேகா பிளேஸ் பகுதியில் விமானப்படை வீரர் ஒருவர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருகோணமலை...

பாடசாலை மைதானம் ஒன்றில் திடீரென தரையிறங்கிய உலங்கு வானூர்தியால் பரபரப்பு

அனுராதபுரம் கலென்பிந்துனுவெவ - பலுகொல்லாகம பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் நேற்று காலை தனியார் நிறுவனமொன்றுக்கு சொந்தமான உலங்கு வானூர்த்தி...

More like this