ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று இன்று (26) இடம்பெறவுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவான கடன் வசதியின் கீழ் மீளாய்வு கலந்துரையாடல்கள் கடந்த 14ஆம் திகதி ஆரம்பமாகியிருந்தன. இந்த மீளாய்வு கலந்துரையாடல் தொடரில், இலங்கைக்கான விரிவான கடன் வசதியின் இரண்டாம் தவணையைப் பெற்றுக்கொள்வது மற்றும் இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மை மீதான நம்பிக்கையை அதிகரிப்பது குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
ஏறக்குறைய 2 வாரங்கள் நீடித்த இந்த கலந்துரையாடல் தொடரின் கடைசி கூட்டம் இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ளது. இந்த கலந்துரையாடலின் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது கடன் தவணையை பெற்றுக்கொள்வது தொடர்பான ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட உள்ளது.