ஒரு இனத்தின் கடந்த கால வரலாறுகளை அந்த இனத்தின் தியாகங்களை ஆவணப்படுத்தல் சந்ததி கடந்து அடுத்த தலைமுறைக்கு முறையாக கடத்திச் செல்லுதல் என்பது மிக முக்கியமான ஒன்று..
சொல்லிக் கொடுங்கள் ஈழத்தின் வரலாறு எம் வரலாற்று பூர்வீகமான வடகிழக்கு தாயகம் எம் மண் எம் மக்கள் போராட்ட வரலாறுகள் எமக்கான போராளிகள் ஒப்பற்ற ஓர் தலைவன் எதற்காக போராடினோம் ஏன் அழிக்கப்பட்டோம் யாரால் அழிக்கப்பட்டோம் எத்தனை நாடுகள் ஒன்று சேர்ந்து அழித்தார்கள் என்பதையெல்லாம்..அது மட்டுமன்றி அழிக்கப்பட்டோம் என்பதை மட்டுமே மனதில் வைத்து புலம்பாமல் தேங்கி நிற்காமல் பொருளாதார ரீதியிலும் கல்வியிலும் நாம் முன்னேற வேண்டும் என்பதையும் கூடவே சொல்லிக் கொடுங்கள்.