சேர்பியாவில் ஓர் இளைஞன் நேற்று நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குறைந்தபட்சம் 8 பேர் பலியானதுடன் மேலும் 14 பேர் காயமடைந்துள்ளர்.
ஓடிக்கொண்டிருந்த காரிலிருந்து மக்கள் மீது இந்நபர் துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டு தப்பியோடியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மிலாடேனோவாக் நகருக்கு அருகிலுள்ள 3 கிராமங்களில் இச்சம்பவம் இடம்பெற்றள்ளது என அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இரவு முழுவதும் நடந்த தேடுதலையடுத்து, 21 வயதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என சேர்பிய அதிகாரிகள் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளனர்.
சேர்பியாவில் இரு நாட்களில் நடந்த இத்தகைய இரண்டாவது சம்பவம் இதுவாகும். தலைநகர் பெல்கிரேட்டில் பாடசாலை ஒன்றில், கடந்த புதன்கிழமை 14 வயது பாடசாலை மாணவன் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் 8 மாணவர்களும் பாதுகாப்பு உத்தியோக்தர் ஒருவரும் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.