மும்பை: செல்பி எடுக்க மறுப்பு தெரிவித்ததாக இந்திய கிரிக்கெட் வீரர் பிருத்வி ஷா மற்றும் அவரது நண்பரை 8 பேர் கொண்ட குழு சரமாறியாக தாக்கினர்.
இந்த சம்பவம் எங்கு நடந்தது என்பது தெரியவில்லை. இந்திய கிரிக்கெட் வீரர் பிருத்வி ஷாவின் நண்பரின் கார் மீது தாக்குதல் நடத்தியதாக 8 பேர் மீது ஓஷிவாரா போலீசார் வழக்குப் பதிவு செய்து உள்ளனர். இது தொடர்பாக மும்பை போலீசார் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.