பொதுவாக இரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த ஒருசில இயற்கை பானங்கள் உதவும். சர்க்கரை நோயாளியாக இருந்து, நீங்கள் ஒரு Tea பிரியராக இருந்தால், செம்பருத்தி Tea குடிக்கலாம்.
இந்த செம்பருத்தி Tea இரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுவதோடு மட்டுமல்லாமல், பல வழிகளில் உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.
இப்போது சரக்கரை நோயாளிகள் செம்பத்தி Tea ஐ எப்படி பருக வேண்டும் என்பதைப் பற்றி பார்ப்போம் :
செம்பருத்தி Tea தயாரிப்பதற்கு, முதலில் செம்பருத்திப் பூக்களை நீரில் கழுவி அதன் இதழ்களை பிரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் பாத்திரத்தில் நீரை ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.
நீர் கொதிக்க ஆரம்பிக்கும் போது, இரண்டு செம்பருத்தி பூக்களின் இதழ்களை நீரில் போட்டு 2 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
பின்பு அதை இறக்கி, வடிகட்டி, அத்துடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.
இந்த செம்பருத்தி Tea ஐ தினமும் குடித்து வந்தால், இரத்தச் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.
செம்பருத்தி Tea ஐ குடிப்பதனால், உடல் சோர்வு மற்றும் மன அழுத்தம் நீங்கும். அத்துடன் இரவு நேரத்தில் நல்ல நிம்மதியான தூக்கமும் கிடைக்கும்.
செம்பருத்தி Tea ஐ குடித்து வருவதன் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம்.
பலர் வைரஸ் தொற்றுக்களால் அடிக்கடி பாதிக்கப்படுவதுண்டு. இதைத் தவிர்க்க செரும்பருத்தி Tea உதவும். ஏனெனில் செரும்பருத்தியில் பக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளை எதிர்த்துப் போராடும் பண்புகள் உள்ளன.