சென்னை பசுமை வழிச் சாலை முதல் அடையாறு வரை மெட்ரோ ரயில் பணிகளுக்காக சுரங்கம் அமைக்கும் பணி தொடங்கியது. சுரங்கம் அமைக்கும் பணி தொடங்குவதால் சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அடையாறு போட் கிளப் சாலை, அவென்யூ போட் கிளப் சாலை ஆகியவை ஒருவழி பாதையாக மாற்றப்பட்டுள்ளன. டி.டி.கே. சாலை சந்திப்பு முதல் ஜி.கே.மூப்பனார் மேம்பால சிக்னல் நோக்கி வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சீனா மற்றும் ஜெர்மனியில் இருந்து 23 சுரங்க இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு பணிகள் நடைபெறுகின்றன.