சென்னை கோயம்பேடு சந்தையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ரசாயனம் கலந்து பழுக்கவைத்த 2 டன் மாம்பழங்களை பறிமுதல் செய்துள்ளனர். கோயம்பேடு மார்க்கெட்டில் ரசாயனம் கலந்த பழங்கள் விற்கப்படுவதாக தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்துள்ளது.இதையடுத்து உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அதிகாரி சதீஷ்குமார் தலைமையில் 5க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
இவை குடோனில் வைக்கப்பட்ட மாம்பழங்களை கடைகளில் வைக்கப்பட்டிருந்த மாம்பழம், பெட்டியில் ரசாயன கலவை கலந்து மாம்பழம் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது, இதனை அடுத்து அதிகாரிகள் உடண்டியக சுமார் 15க்கும் மேற்பட்ட கடைகளில் இருந்து சுமார் 2 டன் மாம்பழங்களை பறிமுதல் செய்து துப்புரவு படுத்தியுள்ளனர்.