சென்னை உயர்நீதிமன்ற ஆவின் வாயிலில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். அம்பேத்கர் புகைப்படத்தை அகற்றும் ஐகோர்ட் சுற்றறிக்கையை ரத்துசெய்ய வலியுறுத்தி வழக்கறிஞர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.
நீதிமன்றங்களில் காந்தி, திருவள்ளுவரை தவிர வேறு எந்த தலைவர்களின் படங்களும் இடம்பெறக்கூடாது என சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. உயர்நீதிமன்ற உத்தரவை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.