சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள 5 கூடுதல் நீதிபதிகளுக்கு தலைமை நீதிபதி டி.ராஜா இன்று பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார். கடந்த 17-ந் தேதி நடைபெற்ற உச்சநீதிமன்ற கொலிஜியம் கூட்டத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக 8 பேரை நியமிக்க ஒன்றிய அரசுக்கு கோலிஜியம் பரிந்துரை செய்தது. இவர்களில் விக்டோரியா கவுரி, வெங்கடாச்சாரி லக்ஷ்மி நாராயணன், பாலாஜி, ராமசாமி நீலகண்டன் மற்றும் கந்தசாமி குழந்தைவேலு ராமகிருஷ்ணன் ஆகிய 5 வழக்கறிஞர்கள், பெரியசாமி வடமலை, ராமச்சந்திரன் கலைமதி மற்றும் கோவிந்தராஜன் திலகவதி ஆகிய 3 மாவட்ட நீதிபதிகள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர்.
இவர்களில் வழக்கறிஞர்கள் விக்டோரியா கவுரி, பாலாஜி, ராமகிருஷ்ணன் ஆகியோரையும், மாவட்ட நீதிபதிகள் கலைமதி, திலகவதி ஆகியோரையும் சென்னை உயர்மன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமி குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதி ஒப்புதல் வழங்கியதை அடுத்து, சென்னை உயர்நீதிமன்றம் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள ஐந்து பேர் இன்று பதவியேற்கவுள்ளனர். சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெறும் நிகழ்வில், புதிய கூடுதல் நீதிபதிகளுக்கு தலைமை நீதிபதி டி.ராஜாப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.