சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் வீட்டில் வெடிகுண்டு வெடிக்கும் என அதிகாலையில் தொலைபேசியில் மிரட்டல் விடுத்துள்ளார்.
காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு செல்போனில் மிரட்டல் விடுத்த கன்னியாகுமரியை சேர்ந்த இசக்கிமுத்து கைது செய்துள்ளனர். மிரட்டல் விடுத்த இசக்கிமுத்துவை கைது செய்து பூதப்பாண்டி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.