Homeஇந்தியாசென்னையில் 20 மணி நேரத்திற்கு பிறகு மெட்ரோ ரயில் சேவை சீரானது.

சென்னையில் 20 மணி நேரத்திற்கு பிறகு மெட்ரோ ரயில் சேவை சீரானது.

Published on

மெட்ரோ வழித்தடத்தில் ஏற்பட்ட சிக்னல் கோளாறு காரணமாக பல ரயில்கள் நிறுத்தப்பட்டது. சென்னை மெட்ரோ ரயில் சேவையை நாள்தோறும் 80 ஆயிரம் பேர் வரையில் பயன்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக, காலை மற்றும் மாலை நேரங்களில் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும்.

இத்தகைய சூழலில், நேற்று காலை 8 மணி அளவில் சென்டிரல் முதல் விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் சேவையில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் அனைத்து மெட்ரோ ரயில்களும் நடுவழியில் நிறுத்தப்பட்டது. பின்னர், ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருப்பதை கண்டறிந்தனர். இதையடுத்து, தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.

இதனால், சென்டிரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையம் வரை மட்டுமே ரெயில்கள் இயக்கப்பட்டது. விமான நிலையத்தில் இருந்து கோயம்பேடு வழியாக சென்டிரல் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு செல்லும் பயணிகள் ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இறங்கி மாறி கோயம்பேடு, ஷெனாய் நகர் வழியாக சென்டிரல் நிலையத்திற்கு சென்றனர்.

இந்த வழித்தடத்தில் 10 நிமிடத்துக்கு ஒரு ரயில் என்ற அடிப்படையிலேயே இயக்கப்பட்டது. இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இந்த நிலையில், தொழில்நுட்பக்கோளாறு இன்று அதிகாலையில் சரிசெய்யப்பட்டது. இதனை தொடர்ந்து 20 மணி நேரத்திற்கு பிறகு தற்போது சென்னையில் மெட்ரோ ரயில் சேவை வழக்கம் போல் இயக்கப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Latest articles

குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்று 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

16-வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் குஜராத் - சென்னை அணிகள் மோதின. இந்த...

843 பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்..

இலங்கை மத்திய வங்கியால்  இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட வரம்பை தளர்த்தியதுடன், 843 வகையான பொருட்களுக்கு அந்தப் பொருட்களை இறக்குமதி செய்யும்போது...

வாடகைக்கு வாகனங்களை பெற்று அடகு வைத்து மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது!

வாடகை அடிப்படையில் வாகனங்களைப்  பெற்று அவற்றை அடகு வைத்து  மோசடியில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தில்  இருவரைக்  கைது செய்வதற்கான...

சீனாவில் தயாரிக்கப்பட்ட விமானம் 128 பயணிகளுடன் வெற்றிகரமாக பயணம்

போயிங் மற்றும் ஏர்பஸ் உள்ளிட்ட சர்வதேச விமான சேவைகளுடன் போட்டியிடும் விதமாக சீன அரசு பயணிகள் விமான போக்குவரத்துக்காக...

More like this