சென்னையில் மருத்துவ அறிவியல் மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முத்தமிழ் பேரவையில் காது, மூக்கு, தொண்டை, தலை மற்றும் கழுத்துக்கான ENT சங்கம் நடத்தும் முதல் தமிழ் மருத்துவ-அறிவியல் மாநாடு இதுவாகும். மாநாட்டில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்த முத்தமிழ் பேரவையில் தமிழில் மருத்துவ அறிவியல் மாநாடு நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் உயிருடன் இருந்திருந்தால் இந்த மாநாட்டைக் கண்டு மகிழ்ந்திருப்பார் என்றும் அவர் கூறினார்.