Homeஇந்தியாசென்னையில் இன்ஸ்டாகிராம் காதலனை தேடி சேலம் சென்ற 13 வயது சிறுமி மீட்பு.

சென்னையில் இன்ஸ்டாகிராம் காதலனை தேடி சேலம் சென்ற 13 வயது சிறுமி மீட்பு.

Published on

சென்னை திருவிக நகரை சேர்ந்த ஒருவரின் 13 வயது மகள், பெரம்பூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். இவர், கடந்த புதன்கிழமை மதியம் உடல்நிலை சரியில்லை என்று கூறி, பள்ளியிலிருந்து பாதியிலேயே புறப்பட்டார். ஆனால், வீட்டிற்கு செல்லவில்லை. மாலை வெகு நேரமாகியும் மகள் வீட்டிற்கு வராததால், அவரது தந்தை செம்பியம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், நேற்று முன்தினம் சேலம் பகுதியில் இருந்து சிறுமியின் பெற்றோரை தொடர்பு கொண்ட குழந்தைகள் நல அமைப்பினர், காணாமல்போன சிறுமி சேலத்தில் இருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் மற்றும் செம்பியம் போலீசார் சேலத்திற்கு சென்று சிறுமியை மீட்டு, சென்னைக்கு அழைத்து வந்தனர்.

விசாரணையில், சிறுமி இன்ஸ்டாகிராம் மூலம்  சேலத்தை சேர்ந்த ஒருவர் சிறுமியை காதலிப்பதாக கூறியதால், சிறுமி காதலனை பார்ப்பதற்காக கோயம்பேட்டிற்கு சென்று பேருந்து மூலமாக சேலம் சென்று, அங்கு தனது காதலனை பார்த்துவிட்டு, மீண்டும் இரவு சேலம் பேருந்து நிலையத்திற்கு வந்து பேருந்து ஏறியதும் தெரிந்தது.

அப்போது, சிறுமி பள்ளி உடையில் இருந்ததால், அங்கிருந்த குழந்தைகள் நல ஆர்வலர்கள் பார்த்து சிறுமியிடம் விசாரித்தபோது, அவர் சென்னையிலிருந்து தனது காதலனை பார்ப்பதற்காக சேலத்திற்கு வந்ததாக கூறியதும் தெரிய வந்தது. பின்னர், போலீசார் சிறுமிக்கு அறிவுரை கூறி, பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

Latest articles

இலங்கையில் இப்படியொரு திருடன்! வியப்பில் நாட்டு மக்கள்

இலங்கையில் திருடன் ஒருவனின் செயற்பாடு குறித்து நாட்டு மக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணிக்கும் ரயிலில்...

தனியார் வகுப்பிற்கு சென்று திரும்பிய 14 வயது மாணவி துஸ்பிரயோகம் – இளைஞன் தலைமறைவு!

தனியார் வகுப்பில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 14 வயது சிறுமிக்கு இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை...

சர்ச்சையில் சிக்கிய யாழ்.மாநகரசபை ஆணையாளர்!

யாழ்.மாநகரசபை ஆணையாளர் பெண் உத்தியோகத்தர் ஒருவருடன் தொலைபேசியில் பேசியபோது பயன்படுத்திய வார்த்தை பிரயோகங்கள் தொடர்பாக விசாரணைகள் இடம்பெறலாம் என...

திருகோணமலையில் கஞ்சா செடிகளை வளர்த்த நபர் கைது!

கஞ்சா செடிகளை வளர்த்து வந்த சந்தேக நபரொருவரை திருகோணமலை- நிலாவளி பொலிஸார் கைது செய்துள்ளனர்.திருகோணமலை- பாலையூற்று முருகன் கோயில்...

More like this