செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇந்தியா‛செக்ஸ்’ டார்ச்சர்.. கல்லூரி பேராசிரியையிடம் ஆபாசம் காட்டிய பாகிஸ்தான் தூதரக அதிகாரி.. டெல்லி ஷாக்

‛செக்ஸ்’ டார்ச்சர்.. கல்லூரி பேராசிரியையிடம் ஆபாசம் காட்டிய பாகிஸ்தான் தூதரக அதிகாரி.. டெல்லி ஷாக்

Published on

spot_img
spot_img

டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக உயர் அதிகாரி விசா கேட்டு சென்ற பஞ்சாப்பை சேர்ந்த கல்லூரி பேராசிரியைக்கு‛செக்ஸ்’ டார்ச்சர் கொடுத்த ஷாக் தகவல் வெளியாகி உள்ளது. பாதிக்கப்பட்ட பேராசிரியை பாகிஸ்தான் வெளியுறவுத்துறைக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு புகார் வழங்கி உள்ளார். பஞ்சாப்பை சேர்ந்த ஒரு பெண் பல்கலைக்கழகம் ஒன்றில் துறை தலைவராகவும், பேராசிரியையாகவும் உள்ளார். இவர் பிற கல்லூரி, பல்கலைக்கழங்களுக்கு சென்று மாணவர்கள் மத்தியில் பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

இந்தியா மட்டுமின்றி அண்டை நாடுகளுக்கும் இவர் சென்று வருகிறார். இந்நிலையில் தான் பாகிஸ்தான் செல்ல அவர் விரும்பியபோது தான் ஒரு ஷாக் சம்பவம் நடந்துள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு

பஞ்சாப்பை சேர்ந்த பேராசிரியை கடந்த 2021ம் ஆண்டு பாகிஸ்தான் செல்ல விரும்பினார். பாகிஸ்தானின் லாகூரில் உள்ள பல்கலைகழக்கத்துக்கு உரையாற்ற செல்லும் அவர் அங்குள்ள பழங்கால சின்னங்களை பார்க்கவும் விரும்பினார். இதையடுத்து அவர் விசாவுக்காக விண்ணப்பம் செய்தார். டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்துக்கு சென்றார். இதையடுத்து தூதரக அதிகாரிகள் அவரிடம் லாகூர் எதற்கு செல்கிறீர்கள் என கேட்டனர். அதற்க அவர், ‛‛பழங்கால நினைவு சின்னங்களை புகைப்படம் எடுத்து அதுபற்றி கட்டுரை எழுத விரும்புகிறேன். மேலும் பல்கலைகழகம் ஒன்றில் பேச உள்ளேன்” என்றார். இதையடுத்து அவர் அங்கிருந்து புறப்பட தயாரானார். இந்த வேளையில் வந்த அதிகாரி, அவரிடம் அநாகரீகமாக நடந்து கொண்டார். தனிப்பட்ட விஷயங்கள் பற்றி கேள்விகள் கேட்டுள்ளார். ‛‛ஏன் திருமணம் செய்யவில்லை. திருமணம் செய்து கொள்ளாமல் எப்படி வாழ்வாய்? பாலியல் ஆசைகளுக்கு என்ன செய்வாய்?” என கேள்விகள் கேட்டு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாக கூறப்படுகிறது.

மேலும் செல்போன் எண்ணை வாங்கி கொண்டு வாட்ஸ்அப்பில் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. இதுபற்றி அந்த பேராசிரியை பாகிஸ்தான் வெளியுறவுத்துறைக்கு ஆன்லைனில் புகார் அளித்தார். அதில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதையடுத்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோவுக்கு கடிதம் எழுதினார். அதற்கும் பதில் இல்லை.

இந்நிலையில் தான் பாதிக்கப்பட்ட போராசிரியை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுபற்றி அந்த பேராசிரியை கூறுகையில், ‛‛2021ல் பாகிஸ்தான் தூதரகத்தில் மிகவும் கசப்பான அனுபவத்தை சந்தித்தேன். என்னிடம் செக்ஸ் ஆசைகள் பற்றி கேள்விகள் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என கூறியுள்ளார்.

Latest articles

அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 23,731 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டுப்பிரிவின் புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில்...

வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை…..

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் சாரதிகளுக்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை விசேட அறிவித்தல்...

லஞ்ச் சீட்டை முற்றாகத் தடை செய்ய நடவடிக்கை….

அடுத்த வருடம் முதல் லஞ்ச் சீட்டை முற்றாகத் தடை செய்ய மத்திய சுற்றாடல் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி...

யாழில் இராணுவ வாகனம் மோதி யுவதியொருவர் உயிரிழப்பு…..

யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகனம் மோதி யுவதியொருவர், இன்று திங்கட்கிழமை (20) உயிரிழந்துள்ளார். புத்தூர் வாதரவத்தையைச் சேர்ந்த 23 வயதுடைய சுதாகரன்...

More like this

அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 23,731 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டுப்பிரிவின் புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில்...

வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை…..

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் சாரதிகளுக்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை விசேட அறிவித்தல்...

லஞ்ச் சீட்டை முற்றாகத் தடை செய்ய நடவடிக்கை….

அடுத்த வருடம் முதல் லஞ்ச் சீட்டை முற்றாகத் தடை செய்ய மத்திய சுற்றாடல் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி...