சூரியனை ஆய்வு செய்யவதற்காக இந்திய ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவால் நிர்மாணிக்கப்பட்ட ஆதித்யா-எல்1 என்ற விண்கலம் இன்று விண்ணுக்கு ஏவப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூரியனை ஆய்வு செய்வதற்காக செல்லும் இந்த ஆதித்யா-எல்1, இன்று (02) 11:50 மணிக்கு ஸ்ரீ ஹரிகோட்டாவிலிருந்து ஏவ திட்டமிடப்பட்டுள்ளது.நிலவில் சாதனை படைத்த சந்திரயான்-3 வெற்றியைத் தொடர்ந்து, ஆதித்யா எல்-1 குறித்த ஆர்வம் உலகம் முழுவதும் எழுந்திருக்கிறது.
இந்த விண்கலம் விண்வெளியில், பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள ‘லக்ராஞ்சியன் புள்ளி எல்-1’ என்னும் இடத்தில் நிலைநிறுத்தப்படவுள்ளதாகவும் இஸ்ரோ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து இஸ்ரோ வெளியிட்டிருந்த அறிக்கையில்,
‘சூரியன் – பூமி அமைப்பில் சுமார் 15 இலட்சம் கிலோமீற்றர் தொலைவில் உள்ள லொக் ரேஞ்ச் புள்ளி 1 (எல் 1) ஐ சுற்றி ஒரு ஒளிவட்டப் பாதையில் ஆய்வகம் வைக்கப்படும் என்றும், இந்த புள்ளியை விண்கலம் அடைய 120 நாட்களுக்கு மேல் ஆகும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.