test
செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஉலகம்சுவிட்சர்லாந்தில் அதிகரிக்கும் இணைய மோசடிகள்

சுவிட்சர்லாந்தில் அதிகரிக்கும் இணைய மோசடிகள்

Published on

spot_img
spot_img

சுவிட்சர்லாந்தில் தொடர்ச்சியாக இணைய மோசடிகள் இடம்பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இணைய மோசடி அறிக்கைகள் 2023 இன் இரண்டாம் பாதியில் கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மோசடியான வேலை வாய்ப்புகள் மற்றும் காவல்துறையில் இருந்து வரும் அழைப்புகள் போலி மின்னஞ்சல்கள் மற்றும் போலி விளம்பரங்கள் என பல முறைகளில் மோசடிகள் இடம்பெறுவதாக சைபர் செக்யூரிட்டிக்கான புதிய பெடரல் அலுவலகம் கடந்த திங்கட்கிழமை அறிவித்துள்ளது.

இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் 30,331 இணையச் சம்பவங்களின் அறிக்கைகள் பெறப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டு இதே காலத்தில் 16,951 ஆக இருந்தது என்று ஒரு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வளர்ந்துவரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை வைத்தும் பல மோசடிகள் சுவிட்சர்லாந்தில் இடம்பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சுவிட்சர்லாந்தின் உத்தியோகபூர்வ கிரிமினல் போலீசாரின் இணையத்தளம் அண்மையில் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது.

அதில் சுவிட்சர்லாந்தில் பரவலாக பயன்படுத்தப்படும் ரியூட்டி என்கின்ற ஆன்லைன் கொள்வனவு இணையத்தளம் போன்ற போலி இணையத்தளத்தை உருவாக்கி அதன் மூலம் மோசடி இடம்பெற்று வருவதாக குறிப்பிட்டுள்ளது.

உண்மையான இணையத்தளத்தில் இருந்து பொருட்களின் தகவல்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி அவர்கள் அதனை வாங்க விரும்பம் தெரிவித்தபின்னர் கொள்வனவு செய்வதற்கான லிங் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

பின்னர் அவர்கள் அந்த லிங்கை கிளிக் செய்தவுடன் அதே பொருளுடன் அவர்கள் வடிவமைத்து வைத்த அதே போன்ற போலி இணையத்தளம் ஓபன் ஆகிறது.

பின்பு வாடிக்கையாளர்கள் போலியான இணையத்ளத்தில் தங்களது கிரடிட் காட்டு தகவல்களை வழங்கி பணம் செலுத்துவதாகவும் குறித்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இது போன்ற சம்பவத்தில் பாதிக்கப்பட்டுவர்களால் சைபர் போலீசாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Latest articles

புலமைப்பரிசில் பரீட்சை விண்ணப்பம் கோரல் இன்று முதல் ஆரம்பம்….

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான இணையவழி முறையின் ஊடாக விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்று (27) முதல்...

சந்தேக நபரால் பொலிஸ் கான்ஸ்டபிள் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி

ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த நபரைக் கைது செய்த பொலிஸ் கான்ஸ்டபிள் சந்தேக நபரால் தாக்கப்பட்டு அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் உயிரிழப்பு…..

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர், ராஜகிரிய பிரதேசத்தில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிரான்ஸ் தூதுவரான Jean...

பிரபல இசையமைப்பாளர் காலமானார்….

இலங்கையின் பிரபல இசையமைப்பாளரும் பாடகருமான ஆனந்த பெரேரா காலமானார். கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தனது 67...

More like this