இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இத்தாலிய பெண் மற்றும் இத்தாலிய ஆண் ஒருவரை ஏற்றிச் சென்ற காரை காட்டு யானை தாக்கி, ரந்தெனிகல பினிகல பகுதியில் வைத்து அவர்கள் பயணித்த காரை கவிழ்த்துள்ளதாக கீர்த்திபண்டாரபுர பொலிஸார் தெரிவித்தனர்.
காட்டு யானை தாக்கியதில் கார் சேதமடைந்துள்ளதாகவும், ஆனால் அதில் பயணித்த இத்தாலிய தம்பதிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் அப்பகுதியின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் லங்காதீபவிடம் தெரிவித்தார்.
எல்ல பிரதேசத்தில் சிறியை பார்த்துவிட்டு இத்தாலிய தம்பதியினர் அப்பகுதியிலிருந்து கண்டி நோக்கி காரில் பயணித்துக் கொண்டிருந்த போது காட்டு யானை ஒன்று வீதியைக் கடப்பதைக் கண்டு காரை நிறுத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.