நாட்டிற்குள் நுழையும் சுற்றுலாப் பயணிகளின் ஊடாக நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட சுற்றுலாத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, இலங்கைக்கு வருகை தரும் அனைத்து சுற்றுலாப் பயணிகளும் தடுப்பூசி அட்டைகளை வைத்திருக்க வேண்டும்.
தடுப்பூசி போடப்படாத சுற்றுலாப் பயணிகள் வருகைக்கு 72 மணி நேரத்திற்கு முன்பு பெறப்பட்ட PCR அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று மேலும் கூறுகிறது.