தென்கிழக்கு ஆசிய நாடான தைவான், 2023இல் 60 லட்சம் சுற்றுலா பயணிகளை ஈர்க்க திட்டமிட்டுள்ளது.
இதற்காக சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை ஊக்குவிக்க அவர்களுக்கு சிறப்பு தொகை அல்லது ஊக்கத் தொகை வழங்கப்போவதாக தைவான் அரசு அறிவித்துள்ளது.அதன்படி, தைவானுக்கு சுற்றுலா வரும் ஒவ்வொரு பயணிக்கும் தலா 165 அமெரிக்க டொலர் வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
மேலும், குழுவாக வரும் 90,000 பயணிகளுக்கு ஒரு குழுவுக்கு தலா 658 அமெரிக்க டொலர் உதவித்தொகை வழங்கப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதாவது 165 அமெரிக்க டொலர் என்பது இலங்கை பண மதிப்பு படி 60, 000 ரூபாய் ஆகும்.
தைவான் அரசின் எதிர்பார்ப்பு தங்கள் நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காகவே இந்த புதிய அறிவிப்பை தைவான் அரசு வெளியிட்டுள்ளது.கடந்தாண்டு அக்டோபர் மாதம் தான் கோவிட் கட்டுப்பாடுகளை தைவான் அரசு நீக்கியது.
அதைத்தொடர்ந்து 2022இல் தாய்லாந்திற்கு 9 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.வியட்நாம், இந்தோனேசியா, ஜப்பான், அமெரிக்கா அகிய நாடுகளில் இருந்து அதிக அளவிலான பயணிகள் தைவான் வந்துள்ளனர்.
எனவே, இந்தாண்டு மேற்கண்ட நாடுகள் மட்டுமல்லாது ஜப்பான், தென்கொரியா, தென்கிழக்கு ஆசியா, ஹாங் காங், மகாவ், ஐரோப்பியா மற்றும் அமெரிக்க நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகளை ஈர்க்க தைவான் திட்டமிட்டுள்ளது.