கடந்த ஆண்டு (2022), இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை 270.2 வீதத்தால் 719,978 ஆக அதிகரித்துள்ளது.
2021 இல் வந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 194,495 மட்டுமே.
அதேநேரம், சுற்றுலா வருமானம் 2021 இல் பதிவு செய்யப்பட்ட 506.9 மில்லியன் அமெரிக்க டொலரிலிருந்து கடந்த வருடம் (2022) 1136.3 மில்லியன் அமெரிக்க டொலர்களாக 124.2 வீதத்தால் வளர்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது.