சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான புதிய உறுப்பினர்கள் நியமனம் இந்த வாரம் இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான புதிய உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான விண்ணப்பங்கள் கோரும் பணி தற்போது நிறைவடைந்துள்ளதாகவும், விண்ணப்பங்கள் மீதான பகுப்பாய்வு தற்போது இடம்பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, புதிய உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான முதற்கட்ட விவாதம் இந்த வாரம் நடைபெற உள்ளது.
இதுவரை கிடைத்துள்ள 1,600க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களின் முதற்கட்ட தகுதிப் பட்டியல் தயாரிக்கப்பட்டதைத் தொடர்ந்து புதிய ஆணைக்குழு உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், அரசியலமைப்பு பேரவை கூட்டத்தின் பின்னரே இந்த விடயம் தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும்.
இதனிடையே, அரசியலமைப்பு பேரவை செவ்வாய்க்கிழமை (பிப். 28) கூடவிருந்த போதிலும், அந்த சந்திப்பு குறித்து இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.