75வது சுதந்திர தின கொண்டாட்டத்திற்கான ஒத்திகையை முன்னிட்டு ஐந்து நாட்களுக்கு காலி முகத்திடலுக்கு அருகாமையிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
ஜனவரி 28, ஜனவரி 29, பெப்ரவரி 01, பெப்ரவரி 02 மற்றும் பெப்ரவரி 03 ஆம் திகதிகளில் காலை 5.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை இந்த போக்குவரத்து ஏற்பாடு அமுல்படுத்தப்படுவதாக சிறிலங்கா காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.