இவ்வருடம் 75வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு தபால் திணைக்களம் இலங்கை மத்திய வங்கியிடமிருந்து 1000 ரூபா பெறுமதியான இரண்டு முத்திரைகளையும் 75 நினைவு நாணயங்களையும் வெளியிடவுள்ளது. தேசிய சுதந்திர தினம் தொடர்பாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் திரு.அசோக பிரியந்த தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வருடத்திற்கான தேசிய சுதந்திர விழா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் “நமோ நமோ மாதா நூற்றாண்டுக்கு ஒரு படி” எனும் தொனிப்பொருளில் காலி முதூற மைதானத்தில் பெருமைக்குரிய முறையில் நடைபெறவுள்ளது.