சுகாதார அமைச்சின் புதிய செயலாளராக விசேட வைத்தியர் பாலித மஹிபால இன்று (2023.11.20) பதவியேற்றுள்ளார்.அவர் இன்று காலை சுகாதார அமைச்சில் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
வைத்தியர் பாலித மஹிபால இதற்கு முன்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமாகவும் அமைச்சின் மேலதிக செயலாளராகவும் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.