சீனாவில் வைத்தியசாலையொன்றில் ஏற்பட்ட தீயினால் குறைந்தபட்சம் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
தலைநகர் பெய்ஜிங் நகரில் நேற்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சாங்பெங் வைத்தியசாலையில் தீ பரவியதாக பிற்பகல் 1.00 மணியளவில் தகவல் கிடைத்தது என அசர சேவைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். அரை மணித்தியாலத்தில் தீ அணைக்கப்பட்டதாகவும் மீட்பு நடவடிக்கைகள் 2 மணித்தியாலங்கள் நீடித்ததாகவும் அதிகாரிகள் தெரிவித:துள்ளனர்.
தீ பரவியதையடுத்து, வைத்தியசாலையிலிருந்து 71 பேர் வெளியேற்றப்பட்டனர்.இன்று புதன்கிழமை காலை வரை 21 பேர் உயிரிழந்துள்ளனர் என சைனா டெய்லி பத்திரிகை தெரிவித்துள்ளது.