வடமேற்கு சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் உடைந்து 115 பேர் இறந்தனர். 200 அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கான்சு பிரவசியயின் தலைநகரமான லான்சோயில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டடுள்ளது.கான்சு பிரவஷ்யயில் மட்டும் 100 பேர் இறந்தனர். ஹைடோங்கில் 15 பேர் இறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.பல கட்டிடங்கள் சேதமடைந்தது.
விபத்து ஏற்பட்ட பகுதியில் பாதுகாப்பு செயல்பாடு தொடர்கிறது. மக்களைத் தேடுவதற்கும் நிவாரணத்திற்கும் அனைத்துவித முயற்சிகளையும் நடத்த வேண்டும் என்று சீன அதிபர் ஷி ஜின்பிங் அறிவுறுத்தினார்.