சிறைக்கைதிகள் சிறைச்சாலையிலிருந்து விடுதலையான பின்னர் அவர்கள் சமூகத்துக்குப் பயனுள்ள நபர்களாக உருவாக்குவதை நோக்காகக்கொண்டு அனைத்து சிறைச்சாலைகளிலும் தொழிற்சாலைகளை அமைப்பதற்காகச் சிறைச்சாலை திணைக்களம் மற்றும் தொழில்துறை அபிருத்தி சபைக்குமிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு திங்கட்கிழமை (12) நீதி அமைச்சில் இடம்பெற்றது.
நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ்வுக்கு முன்னால் சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய மற்றும் தொழில்துறை அபிவிருத்தி சபையின் தலைவர் சாரங்க அலகப்பெரும ஆகியோர் குறித்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.
புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் அனைத்து சிறைச்சாலைகளிலும் தொழிற்சாலைகளை அமைப்பதற்கு இந்த நாட்டு தொழில் முயற்சியாளர்களுக்கு தொழிலதிபர்களுக்கு அதிக சந்தர்ப்பம் கிடைக்கப்பெறுவதுடன் தொழிற்சாலைகளில் பயிற்சி பெறும் கைதிகளுக்காகத் தொழில் அபிவிருத்தி சபை மற்றும் சிறைச்சாலை திணைக்கள சான்றிதழ் வழங்கிவைக்கப்படும் என நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.