கடந்த சில வாரங்களில் கொழும்பு விளக்கமறியல் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளில் அம்மை நோய் பரவல் அதிகரித்துள்ளதோடு சுமார் 20 கைதிகள் மற்றும் அதிகாரிகள் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
எனவே சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மற்றும் கைதிகளுக்கு உடனடியாக தடுப்பூசியை செலுத்துமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன சிறைச்சாலை ஆணையாளருக்கு கடிதம் மூலம் அறியப்படுத்தியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவிக்கையில்,
சிறைச்சாலைகளில் தற்போது பரவி வரும் அம்மை நோயை விரைவாகக் கட்டுப்படுத்தாவிட்டால் எதிர்காலத்தில் மிக மோசமான நிலைமை ஏற்படக்கூடும்.
அதேநேரம் அம்மை நோய் வெளி சமூகத்திற்கு பரவும் அபாயம் காணப்படுகிறது.அதிகாரிகள் மற்றும் கைதிகளுக்கு விரைவில் தடுப்பூசியை செலுத்துவது சிறைச்சாலை திணைக்களத்தின் பொறுப்பாகும்” என்றார்.