சிறுவர்கள் மத்தியில் பரவி வரும் நோய் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அண்மைய நாட்களில் சிறுவர்கள் மத்தியில் நோய் நிலைமைகளை அவதானிக்க முடிவதாக லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் பீ.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.தொண்டை வலி, காய்ச்சல், இருமல் உள்ளிட்ட நோய் அறிகுறிகளை அவதானிக்க முடிவதாகத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த ஆண்டின் கடந்த இரண்டு மாதங்களில் டெங்க நோயாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.இரண்டு மாதங்களில் 12946 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.