செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைசிறுமியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய இராணுவச் சிப்பாய்க்கு 15 ஆண்டுகள் கடூழியச் சிறை

சிறுமியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய இராணுவச் சிப்பாய்க்கு 15 ஆண்டுகள் கடூழியச் சிறை

Published on

spot_img
spot_img

பதின்ம வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றத்துக்கு இராணுவச் சிப்பாய்க்கு 15 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்தார்.

2013ஆம் ஆண்டு மே 14ஆம் திகதி நெடுங்கேணியில் 16 வயதுக்குட்பட்ட சிறுமி ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு உள்படுத்தப்பட்டார் என்று பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.

பாதிக்கப்பட்ட சிறுமியின் முறைப்பாட்டின் அடிப்படையில் அந்தப் பகுதி இராணுவ முகாமில் பணியாற்றிய இராமச்சந்திர ஆரியரட்ண என்ற இராணுவச் சிப்பாய் கைது செய்யப்பட்டார்.

அவர் கடமையிலிருந்த போது சம்பவம் இடம்பெற்றது என்று ஆரம்ப விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது.

சந்தேக நபருக்கு எதிராக வவுனியா நீதிவான் நீதிமன்றில் சுருக்க முறையற்ற விசாரணை இடம்பெற்றது. அதைத் தொடர்ந்து சந்தேக நபருக்கு எதிராக சட்ட மா அதிபரினால் வவுனியா மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று இன்று தீர்ப்புக்காக தவணையிடப்பட்டிருந்தது.

“சிவில், பொலிஸ் சாட்சியங்கள் மற்றும் நிபுணத்துவ சாட்சியங்களின் அடிப்படையில் வழக்குத் தொடுநர் எதிரி மீதான குற்றச்சாட்டுக்களை நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபித்துள்ளார். இரண்டு குற்றச்சாட்டுகளிலும் எதிரி குற்றவாளியாக இனங்காணப்படுகிறது” என்று மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

“சிறுமியை பாதுகாவலரின் பாதுகாப்பிலிருந்து கவர்ந்து அழைத்துச் சென்றார் என்று எதிரி மீதான முதலாவது குற்றச்சாட்டுக்கு 7 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது.

பதின்ம வயதுச் சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உள்படுத்தினார் என்ற எதிரி மீதான இரண்டாவது குற்றச்சாட்டுக்கு 15 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 இலட்சம் ரூபாய் இழப்பீட்டை எதிரி வழங்கவேண்டும் என்பதுடன், 5 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்தவேண்டும். செலுத்தத் தவறின் ஒரு வருட சாதாரண சிறைத்தண்டனையை அனுபவிக்கவேண்டும்” என்றும் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தண்டனைத் தீர்ப்பளித்தார்.

Latest articles

மியான்மாரில் பயங்கரவாதிகளால் அழைத்துச் செல்லப்படும் இலங்கையர்கள்….

சுற்றுலா விசாவில் தாய்லாந்து சென்று அதன் எல்லை வழியாக மியான்மாருக்குள் பிரவேசித்த 25க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் அந்நாட்டு பயங்கரவாத...

வெற்றியுடன் தொடரை ஆரம்பித்த மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி ……

இந்தியாவில் இன்றைய தினம் ஆரம்பமான இரண்டாவது பருவகால மகளிர் பிறீமியர் லீக் (2024) தொடரின் முதல் போட்டி சற்று...

நாளை (24) காலை முதல் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் மீனவர்கள்….

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு இலங்கை சிறையில் உள்ள ஐந்து மீனவர்களை உடனடியாக விடுதலை...

போதைப் பொருளுடன் இளம் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது…

கற்பிட்டி - நுரைச்சோலை, ஆலங்குடா பகுதியில் உள்ள கைவிடப்பட்ட வீடொன்றில் இருந்து போதைப் பொருளுடன் இளம் பொலிஸ் கான்ஸ்டபிள்...

More like this