Homeஇலங்கைசிகிரியாவில் ஏற்படவுள்ள மாற்றம் வெளியான அறிவிப்பு

சிகிரியாவில் ஏற்படவுள்ள மாற்றம் வெளியான அறிவிப்பு

Published on

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சினால் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடனுதவியின் கீழ் 15 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் நாட்டுக்கு பெருமளவு வருமானத்தை ஈட்ட முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

சிகிரியாவை சுற்றுலாப் பிரதேசமாக அபிவிருத்தி செய்ததன் பிரகாரம், புதிய கிராம வாகன தரிப்பிடம், சுகாதார வசதிகள் மற்றும் சிகிரியா நுழைவாயில் நிர்மாணம், சிகிரியா தகவல் நிலையத்தை நிறுவுதல், மாபாகல தொல்பொருள் நிலையத்தை பாதுகாத்தல், சிகிரியா ஏரியை புனரமைத்தல், ராமகெலேயில் இருந்து பிதுரங்கல வரையிலான பாரம்பரிய பாதையை நிறுவுதல்.

கலுதிய குளத்தைச் சுற்றியுள்ள தொல்பொருள் நிலையங்களைப் பாதுகாத்தல், இனாமலுவ ஏரியை மையமாகக் கொண்ட சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்கான உட்கட்டமைப்பு அபிவிருத்தி, கலேவெல ஏரியை மையமாகக் கொண்ட சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகள் மற்றும் சுற்றுலா உள்கட்டமைப்புகளை அபிவிருத்தி செய்தல் மற்றும் திகம்பத்தன பிரதேசத்தில் திடக்கழிவு மேலாண்மை அமைப்பு அபிவிருத்தி ஆகிய 9 உப திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது, ​​சிகிரியா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அடையாளம் காணப்பட்ட பிரதேசங்கள் பிளாஸ்டிக் பாவனையற்ற சூழலுக்கு உகந்த சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படை திட்டமிடல் நடவடிக்கைகள் இந்த நாட்களில் அனைத்து தரப்பினருடனும் இணைந்து மேற்கொள்ளப்படுகின்றன.

சிகிரியாவை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி செய்யும் போது, ​​உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் அபிவிருத்திக்குத் தேவையான தனியார் முதலீடுகளை ஊக்குவிக்கவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்துடன், இத்திட்டம் தொடர்பில் மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு மற்றும் தம்புள்ளை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவிற்கு அறிவிக்குமாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

Latest articles

வடமாகாணத்தில் 25,000 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள்

வடமாகாணத்தில் நிரந்தர வீடுகள் இல்லாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 25,000 நிரந்தர வீடுகளை கட்டிக்கொடுத்து வடமாகாணத்தில் உள்ள...

ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டு அறிமுகம்

ஜேர்மனியில் 49 யூரோக்கள் பயணச்சீட்டின் அறிமுகம் பொதுப்போக்குவரத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து,...

அதிகரிக்கப்படவுள்ள ரயில் கட்டணங்கள்

ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை ரயில்வே திணைக்களத்தை அதிகாரசபையாக மாற்றியதன் பின்னர் அனைத்து ரயில்...

உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதை:முதலமைச்சர் அறிவிப்பு

இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்....

More like this