செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇந்தியாசாலையில் சண்டைபோட்ட மாடுகள் முட்டியதில் ஆட்டோ கவிழ்ந்து பள்ளி மாணவி பலி - பெற்றோர் கண்...

சாலையில் சண்டைபோட்ட மாடுகள் முட்டியதில் ஆட்டோ கவிழ்ந்து பள்ளி மாணவி பலி – பெற்றோர் கண் எதிரே பரிதாபம்.

Published on

spot_img
spot_img

சென்னை சேத்துப்பட்டு ராஜம்மாள் தெருவைச் சேர்ந்தவர் சார்லஸ் (வயது 50). சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். இவருடைய மனைவி மேரி சைலா (45). இவர்களுடைய மகள் ரூத் சோபியா (13). இவர், அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் காலை திருவள்ளூர் அடுத்த திருவாலங்காடு பகுதியில் உள்ள மாமியார் வீட்டுக்கு சார்லஸ் குடும்பத்துடன் ஆட்டோவில் சென்றார். பின்னர் மாலையில் சென்னைக்கு திரும்பி வந்தார். திருவள்ளூர் அடுத்த தொழுவூர் பகுதியில் சி.டி.எச்.சாலையில் வரும்போது சாலையில் 2 மாடுகள் சண்டை போட்டுக்கொண்டே வந்து இவர்களது ஆட்டோ மீது முட்டின. இதில் நிலை தடுமாறிய ஆட்டோ சாலையில் கவிழ்ந்தது. இதில் ஆட்டோவில் வந்த சார்லஸ் உள்பட 3 பேருக்கும் தலை, முகம் உள்பட உடலின் பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் 3 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் மாணவி ரூத் சோபியா ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். தலையில் படுகாயம் அடைந்த சார்லஸ் மற்றும் அவருடைய மனைவி மேரி சைலா இருவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இது குறித்து ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பெற்றோர் கண் எதிரேயே பள்ளி மாணவி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Latest articles

ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு குழந்தைகள்…..

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மருத்துவ வரலாற்றில் ஒரு கருவில் நான்கு குழந்தைகளை ஆரோக்கியமான முறையில் தாய் ஒருவர் பிரசவித்துள்ள...

மீனவர்களுக்கு விடுக்கப்பட்ட அவசர அறிவித்தல்

பல நாள் மீன்பிடி படகுகள் உட்பட அனைத்து மீன்பிடி படகுகளும் இன்று முதல் மறு அறிவித்தல் வரை கடலுக்கு...

வெசாக் பண்டிகையை முன்னிட்டு சில அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு…..

நாடளாவிய ரீதியில் எதிர்வரும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு லங்கா சதொச சில அத்தியாவசிய பொருட்களின் விலைகளைக் குறைக்கத் தீர்மானித்துள்ளது. இதன்படி,...

யாழில் பாணுக்குள் கண்ணாடித்துண்டுகள் : விசாரணைகள் முன்னெடுப்பு…

யாழ்ப்பாணம், மருதானர்மடத்தில் உள்ள கடையொன்றில் நேற்று வாங்கிய பாணில் கண்ணாடி துண்டு ஒன்று காணப்பட்டுள்ளது. பாணை வாங்கி சாப்பிட்டவர் பாணுக்குள்...

More like this