செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைசாரதி தூங்கியதால், புத்தாண்டு அன்று 15 பேருக்கு நேர்ந்த விபரீதம்.

சாரதி தூங்கியதால், புத்தாண்டு அன்று 15 பேருக்கு நேர்ந்த விபரீதம்.

Published on

spot_img
spot_img

கதிர்காமத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து ஒன்று தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளானதில் 15 பேர் படுகாயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்த சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த விபத்து சம்பவம் இன்று காலை (01-01-2023) இடம்பெற்றுள்ளது,

மேலும் இந்த விபத்தில் காயமடைந்த 15 பயணிகள் காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கராப்பிட்டிய வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்,காயமடைந்தவர்களில் 11 ஆண்களும் 4 பெண்களும் மூன்று குழந்தைகளும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பத்தேகம மற்றும் பின்னதுவ இடையே 88 ஆவது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.யாத்திரீகர்கள் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
மேலும், சாரதி தூங்கியதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.மேலும் குறித்த பேரூந்து வீதியை விட்டு விலகி சுமார் 100 மீற்றர் தூரம் பயணித்து பாறையில் கவிழ்ந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Latest articles

இன்றும் நாட்டில் அதிக வெப்பநிலை ….

சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் மன்னார் மாவட்டத்திலும் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படும் என...

கிளிநொச்சி – பளை இயக்கச்சியில் தென்னிலங்கையை சேர்ந்தவர்கள் காடழித்து காணிகளை கைவசப்படுத்த முயற்சி….

கிளிநொச்சி பளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் கடந்த சில நாட்களாக தென்னிலங்கையை சேர்ந்த பெரும்பான்மை இனத்தைவர்கள்...

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழப்பு…..

முல்லைத்தீவு அளம்பில் பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் எதிர் எதிரே மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் மரணமடைந்துள்ளார். நேற்று (01.03.2024) இரவு...

இலங்கையில் பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை….

இலங்கையில் பாரிய மனித உரிமை மீறல்கள் மற்றும் மனித உரிமை துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டவர்கள் என நம்பகதன்மை மிக்க விதத்தில்...

More like this